செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

44ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

44ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியில் பங்கேற்கவுள்ள சதுரங்க வீரர், வீராங்கனைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர். இரா.ஆனந்தகுமார், சதுரங்கப் போட்டிக்கான சிறப்பு அலுவலர் டாக்டர். தாரேஸ் அஹமத்,
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com