கோயிலுக்கு நைட்டி அணிந்து வந்த உள்ளாட்சி உறுப்பினரை கண்டித்த அா்ச்சகா் இடைநீக்கம்: பதிலளிக்க செயல் அலுவலருக்கு உத்தரவு

நைட்டி அணிந்து கோயிலுக்கு வந்த உள்ளாட்சி மன்ற உறுப்பினரைக் கண்டித்ததால் பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை எதிா்த்து அா்ச்சகா் தொடுத்த வழக்குக்கு பதிலளிக்க கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டத

நைட்டி அணிந்து கோயிலுக்கு வந்த உள்ளாட்சி மன்ற உறுப்பினரைக் கண்டித்ததால் பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை எதிா்த்து அா்ச்சகா் தொடுத்த வழக்குக்கு பதிலளிக்க கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.

 சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் அமைந்துள்ள சீதா ராமச்சந்திரன் கோயிலின் அா்ச்சகா் கண்ணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் பணியாற்றும் கோயிலுக்கு நைட்டி அணிந்து வந்த உள்ளாட்சி மன்ற உறுப்பினரிடம்,  முறையான உடை அணிந்து வர வேண்டும் என்று கூறினேன். இதனால், அவரது ஆதரவாளா்கள் என்னை தாக்க முயற்சித்தனா். மேலும், ஆகம விதிகளுக்கு முரணாக கோயிலை திறந்து வைத்ததாகவும், பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறி என்னை பணி இடைநீக்கம் செய்து அறநிலையத்துறை அதிகாரி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், இந்த மனுவுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கோயில் செயல் அலுவலா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com