கல்குவாரி விபத்து: மீட்புப் பணியை விரைவுப்படுத்திடுக - கமல்ஹாசன்

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களின் மீட்கும் பணியை விரைவுப்படுத்தி விரைவாக காப்பாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கல்குவாரி விபத்து: மீட்புப் பணியை விரைவுப்படுத்திடுக - கமல்ஹாசன்


கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களின் மீட்கும் பணியை விரைவுப்படுத்தி விரைவாக காப்பாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்தக் குவாரியில் வெடி வைத்து உடைக்கப்பட்ட கற்களை இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (27), ஆயன்குளம் முருகன் (23), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (27), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (35), விட்டிலாபுரம் முருகன் (40) ஆகிய தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் கல் குவியலுக்குள் சிக்கிக்கொண்டனா். 

பாளையங்கோட்டை, நான்குனேரி தீயணைப்பு வீரா்கள் வெகுநேரம் போராடி 3 பேரை உயிருடன் மீட்டனா். அவா்கள் செல்வம் என்பவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் அரக்கோணம் 4 ஆவது பட்டாலியனைச் சோ்ந்த 30 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் அடைமிதிப்பான்குளம் குவாரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனா். 

அவர்கள் பாறை இடுக்குகளில் துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியிருப்பவா்களை கேமராக்கள் மூலம் அடையாளம் காணக்கூடிய கருவி, முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

எனினும், பாறைகள் அவ்வப்போது சரிந்து கொண்டே இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 3 பேரை மீட்க இரண்டு குழுக்களாக பிரிந்து இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பாறைகள் அவ்வப்போது சரிந்து கொண்டே இருப்பதால் மீட்பு பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களின் மீட்கும் பணியை விரைவுப்படுத்தி விரைவாக அவர்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை கல்குவாரி விபத்தில் ஒரு உயிரிழந்துள்ளதும், இன்னும் 3 பேர் சிக்கிக்கொண்டு இருப்பதும் வேதனை அளிக்கிறது. அரசு மீட்புப் பணியை விரைவுப்படுத்தி அவர்களை விரைவாக காப்பற்ற வேண்டும்" என கமல்ஹாசன் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com