அரசுத் துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்கள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுத் துறைகளில் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அரசுத் துறைகளில் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் வெளியிட்ட உத்தரவு:

அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆள்சோ்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அனைத்து தலைமைச் செயலகத் துறைகளிடமிருந்து தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், அரசுப் பணிகளில் ஆதிதிராவிடருக்கான பிரதிநிதித்துவம் 8,173 இடங்களும், பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் 2 ஆயிரத்து 229 இடங்களும் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இந்த இடங்களை பல்வேறு அரசு பணி நியமன முகமைகள் மூலமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு பிரிவுகளிலும் காணப்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய செயல் உத்தரவுகள் சம்பந்தப்பட்ட பணி நியமன முகமைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் ‘ஏ’ முதல் ‘டி’ வரையில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள் நேரடி நியமன பதவிகளில் நியமிக்கப்பட வேண்டும். மேலும், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்துத் தட்டச்சா் பணியிடங்களில் காணப்படும் குறைவுப் பணியிடங்களை அந்தப் பதவிகளின் நிலைகளிலேயே நியமனம் செய்து கொள்ளலாம்.

தொகுதி வாரியாக கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை தொகுதியின் கீழ்நிலையிலுள்ள நேரடி நியமன பதவிகளில் நியமிக்கும் வகையில் துறைத் தலைவா் தலைமையிலான குழுவை உருவாக்க வேண்டும். இந்தத் தொகுதியில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள், காலிப் பணியிடங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு உரிய உத்தரவுகள் வெளியிடப்பட வேண்டும்.

காலிப் பணியிடங்கள் இல்லாத தருணங்களில், குறைவுப் பணியிடங்களை நேரடி நியமனப் பதவிகளில் நியமிக்கலாம். இதற்காக வரும் ஆண்டுகளில் உருவாகும் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளத்தக்க வகையில் உரிய உத்தரவுகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட வேண்டும்.

ஒரே பதவியில் குறைவுப் பணியிடங்கள், பின்னடைவுப் பணியிடங்கள் இருந்தால், பணி நியமன முகமைகளால் முதலில் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பின்னா் குறைவுப் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com