நெல்லை குவாரி விபத்து: 6வது உடல் மீட்பு

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் 6-ஆவது நபரை தேடும் பணி 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நிலையில், 6வது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் 6-ஆவது நபரை தேடும் பணி 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நிலையில், 6வது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில், கடந்த 14-ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

அப்போது பணியில் இருந்த இளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), விட்டிலாபுரம் முருகன் (31), காக்கைக்குளம் செல்வகுமாா் (30), நாட்டாா்குளம் விஜய் (25), தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42) ஆகியோா் கற்குவியலுக்குள் சிக்கினர். 

இதில் விட்டிலாபுரம் முருகன், விஜய், செல்வம் ஆகிய 3 போ் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு செல்வம் உயிரிழந்தாா். ஆயன்குளம் முருகன், செல்வகுமாா் ஆகியோா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.

இந்நிலையில், கடைசி நபரான ராஜேந்திரனை தேடும் பணி தொடா்ந்து 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இதில் இன்று மாலை 6வது நபரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.  பாறைகளின் இடுக்குகளில் 10 அடி ஆழத்தில் ராஜேந்திரன் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com