துர்கா காலனியில் மதுரை மேயர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு 

மதுரை 97 வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனி பகுதியில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. 
மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் காரை முற்றுகையிட்ட துர்கா காலனி பகுதி பொதுமக்கள்
மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் காரை முற்றுகையிட்ட துர்கா காலனி பகுதி பொதுமக்கள்


மதுரை 97 வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனி பகுதியில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. 

மதுரை 97 -ஆவது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனி பகுதியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காரில் ஏறி மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல இருந்த மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் காரை அப்பகுதி மக்கள் வழி மறித்தனர். 

தொடர்ந்து, எதற்காக இங்கு வந்தீர்கள்.? எதற்காக பூமி பூஜை நடக்கிறது.? இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் என்ன செய்கிறீர்கள்.? என்று கேள்வி எழுப்பினர்? இவை அனைத்திற்கும் அதிகாரிகள் மற்றும் மேயர் பதிலளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டதும் அவர்களது காரை வழிமறித்த அப்பகுதி பொதுமக்கள், தேர்தலின் போது எங்களது அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், எதையும் செய்யவில்லை என்றும், இப்பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் உள்ளீர்கள், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று அதிகாரிகளிடம் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, மக்களின் கேள்விக்கு எதற்கும் பதிலளிக்காமல் மேயர் இந்திராணி காரின் உள்ளேயே அமர்ந்திருந்தார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் பேசி சமாதானப்படுத்திய நிலையில், மேயர் சென்ற காரை அங்கிருந்து நைசாக அப்புறப்படுத்தினார். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com