கம்பம் பிரம்ம குமாரிகளின் பொன்னான பாரதம் தொடக்க விழா

தேனி மாவட்டம், கம்பத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இந்திய சுதந்திர பவள விழாவிலிருந்து பொன்னான பாரதம் நோக்கி என்ற தலைப்பில் தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கம்பம் பிரம்ம குமாரிகளின் பொன்னான பாரதம் தொடக்க விழா
கம்பம் பிரம்ம குமாரிகளின் பொன்னான பாரதம் தொடக்க விழா


கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இந்திய சுதந்திர பவள விழாவிலிருந்து பொன்னான பாரதம் நோக்கி என்ற தலைப்பில் தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராஜஸ்தான் காட்லிவுட் ஸ்டுடியோ தமிழ்த்துறை தலைவர் ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினார். மதுரை மண்டல மூத்த ராஜயோக ஆசிரியை செந்தாமரை தியான அனுபவம் குறித்து பேசினார்.

நிகழ்சியில் சமூகத்தில் தனிநபரின் பங்கு மற்றும் சுய வாழ்வின் குறிக்கோள், இயற்கையான சுயத்தின் நற்குணங்கள், சுயமரியாதை, உலகளாவிய சகோதரத்துவ உணர்வை வளர்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து பேசப்பட்டன. 

இதில், கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள், பள்ளி தாளாளர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், பிரம்மா குமாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com