பள்ளி திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்று தெரிவித்தார். 
பள்ளி திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: முதல்வர் ஸ்டாலின்


பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்; தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பேசினார். 

அப்போது, சென்னையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கல்வி சேவை வழங்கி வருகிறது டிஏவி குழுமம். டிஏவி குழுமத்தில் மட்டும் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி பற்றும், தாய்நாடு பற்றும் மிகவும் முக்கியம். போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

கல்வி என்பதே இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு செல்வது தான். கரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கல்லூரி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 

கல்வி மட்டுமே மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து. தமிழக அரசு தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்; தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com