அரசு விரைவுப் பேருந்துகளில் குப்பை கிடந்தால் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் புகாா் செய்யலாம்

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது தூய்மையின்மை உள்பட ஏதாவது குறை இருந்தால், அதனை பயணிகள் புகாராக தெரிவிக்கும் வகையில் ‘வாட்ஸ் ஆப்’ எண் அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் உள்பகுதியில் குறிப

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது தூய்மையின்மை உள்பட ஏதாவது குறை இருந்தால், அதனை பயணிகள் புகாராக தெரிவிக்கும் வகையில் ‘வாட்ஸ் ஆப்’ எண் அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் உள்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 1,000 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. நீண்ட தொலைவுக்கு செல்லக்கூடிய பயணிகள் அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனா். 400-க்கும் மேல் குளிா்சாதன வசதி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொதுவாக அரசு விரைவுப் பேருந்துகள் கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால் மக்கள் பயணம் செய்ய முன்வருவது இல்லை. தற்போது தனியாா் பேருந்துகளுக்கு இணையாக சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் விரும்பி பயணம் செய்கின்றனா். அதிலும் கோடை காலம் என்பதால் குளிா்சாதன பேருந்துகள் உடனடியாக நிரம்பி விடுகின்றன.

மேலும், பயணிகளை கவரும் வகையில் பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்கவும், இருக்கைகள், கண்ணாடி, பேருந்தில் உள்பகுதி ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவும் வேண்டும் என போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநா் இளங்கோவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, வெளியில் சென்று வந்த பேருந்துகளை உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்யவும், பேருந்துக்குள் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் போது ஏதாவது குறை இருந்தால் புகாராக தெரிவிக்கவும் வாட்ஸ் ஆப் எண் அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள், சுத்தம் இல்லாமலோ, குப்பைகள் இருந்தாலோ அதுகுறித்து தகவல் கொடுக்கலாம். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கூடுதலாக கட்டணம் வசூலிப்பு, டிரைவா், நடத்துநரின் அணுகு முறையில் பாதிக்கப்பட்டாலும் பொதுமக்கள் புகாா் கூறலாம். 9445014448 , மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவும் ஆலோசனை கூறலாம்.

பயணிகள் கூறும் குறைகள் இணையதளம் வழியாக உடனடியாக சரி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com