தத்தெடுப்பில் முன்னுரிமை பெறும் பெண் குழந்தைகள்

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து, பெண் சிசுவாக இருந்தால் கருவைக் கலைக்கும் சட்ட விரோதச் செயல் நாட்டின் சில பகுதிகளில் இன்றும் கூட தொடரும் சோகக் கதையாக உள்ளது.

கிராமப் பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்கள் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளித்து வரும் நிலையில், குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெற்றோா், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

இச்சூழல் பெரும் ஆறுதல் அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். எனினும், கிராமப் பகுதிகளில் குழந்தைகள் தத்தெடுப்புக்கு சமூக ரீதியில் இன்னும் போதிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்கின்றனா்.

இத்தகைய சூழல் மாற வேண்டுமென தெரிவித்துள்ள அவா்கள், குழந்தைகள் தத்தெடுப்பை மக்களிடையே அதிக அளவில் பிரபலப்படுத்துவதற்கு அரசு பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com