திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கொத்தங்குடி வாய்க்காலில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கொத்தங்குடி வாய்க்காலில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் 'மக்களைத் தேடி மருத்துவம்' குழுவினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவரிடம் மனுக்களை அளித்தனர்.

அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார 115 பணிகள் மூலம் 1200.56 கி.மீ நீளத்துக்கு ரூ.12.08 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளில் 35 பணிகள் 344.15 கி.மீ நீளத்துக்கு ரூ.3. 05 கோடி மதிப்பில் தஞ்சாவூர் காவிரி வடிநிலக்கோட்டம் மூலமாகவும், 38 பணிகள் 333.75 கி.மீ நீளத்துக்கு ரூ. 3.94 கோடி மதிப்பில் தஞ்சாவூர் வெண்ணாறு வடிநிலக் கோட்டம் மூலமாகவும், 42 பணிகள் 522.26 கி.மீ நீளத்துக்கு ரூ. 5.09 கோடி மதிப்பில் திருவாரூர் வெண்ணாறு வடிநிலக் கோட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com