வடகிழக்குப் பருவமழைக்கு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் இழப்பீடு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுநரும் என இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும், வடகிழக்குப் பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. பருவமழையை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடசென்னை தாழ்வான பகுதி என்பதால் வழக்கமான மழை பாதிப்புகள் உள்ளது. நீரை வெளியேறும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
எந்த இடங்களில் பிரச்னை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி அதைச் சரிசெய்யப்படும் என மேலும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30.4.1976: நாளைமுதல் தென் ரயில்வேயில் 91 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

கால்பந்து களம்...

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


