பாவூர்சத்திரத்தில் முதன் முறையாக மாட்டுச் சந்தை தொடக்கம்!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மாட்டுச்சந்தை புதன்கிழமை காலை  நடைபெற்றது.
 பாவூர்சத்திரத்தில் மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த மாடுகள்.
 பாவூர்சத்திரத்தில் மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த மாடுகள்.

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மாட்டுச்சந்தை புதன்கிழமை காலை  நடைபெற்றது.

பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பழைய காய்கனி சந்தை அமைந்துள்ளது. இங்கு வியாழக்கிழமை தோறும் ஆடுகள் சந்தை நடைபெறுவது வழக்கம். தற்போது முதன் முறையாக இங்கு மாட்டுச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமை தோறும் இச்சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் சந்தையான புதன்கிழமை (நவ.2) காலை முதல் 50க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.  

ஆவுடையானூர், பொடியனூர்;, திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். 

சிறிய கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் மாடுகள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானதானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com