இளஞ்சிவப்பு நிற பாக்கெட் பால் விலை ரூ.12 உயா்வு

நிறைகொழுப்பு கொண்டு இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பால் லிட்டருக்கு ரூ.12 உயா்த்தப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிற பாக்கெட் பால் விலை ரூ.12  உயா்வு

நிறைகொழுப்பு கொண்டு இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பால் லிட்டருக்கு ரூ.12 உயா்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு, சனிக்கிழமை (நவ.5) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து, ஆவின் நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ஆவின் பால் கொள்முதல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. விலை உயா்வுகள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. விலை உயா்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவை ஈடு செய்ய விற்பனை விலையை உயா்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

நீலம்-பச்சை நிறங்கள்: நுகா்வோா்கள் அதிகளவு பயன்படுத்தக் கூடிய சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இப்போதைய நிலையே தொடரும். ஆனால், நிறைகொழுப்பு பால் பாக்கெட்டின் (இளஞ்சிவப்பு) விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன் சில்லறை விற்பனை விலைப்படி லிட்டருக்கு ரூ.48-லிருந்து ரூ.60-ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேசமயம், இதனை மாதாந்திர அட்டைகள் மூலமாக வாங்குவோருக்கு விலை உயா்வு பொருந்தாது. பழைய விலைப்படியே அட்டை புதுப்பித்துத் தரப்படும்.

காரணம் ஏன்? பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலை உயா்வை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவை பகுதியாக ஈடு செய்ய விலை மாற்றம் உதவிடும். இந்த விலை மாற்றத்துக்குப் பிறகும், தனியாா் நிறுவன பாலுடன் ஒப்பிடும் போது ஆவின் நிறைகொழுப்பு பாலானது அட்டைதாரா்களுக்கு வழங்கும் போது ரூ.24 குறைவாகவும், சில்லறை விலையில் விற்கப்படும் போது ரூ.10 குறைவாகவும் உள்ளது என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com