ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதித்தவர் நாயுடன் உணவு சாப்பிடும் அவலம்!

திருத்தணயில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதித்த ஒருவர் நாயுடன் உணவு சாப்பிடும் அவலத்தை கண்டோர், அவரை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நாயுடன் உணவு சாப்பிடும் மனநலம் பாதித்தவர்
நாயுடன் உணவு சாப்பிடும் மனநலம் பாதித்தவர்
Published on
Updated on
2 min read

திருத்தணி: திருத்தணயில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதித்த ஒருவர் நாயுடன் உணவு சாப்பிடும் அவலத்தை கண்டோர், அவரை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் மன ரீதியிலான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கான சூழலும் சிகிச்சைகளும் அமைய பெறாததால் அவர்கள் மனநோயாளிகளாக மாறுகின்றனர். இதில் சிலருக்கு குடும்பத்தின் அரவணைப்பும், அன்பும் கிடைக்கப்பெறாததால் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் நிலை உருவாகிறது. இவ்வாறு சாலைகளில் ஓரம் அடைக்கலம் தேடி இருக்கும் அடையாளம் தெரியாத மனநோயாளிகளை மீட்டு மறுவாழ்வு அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது, அரசும், சில தன்னார்வ அமைப்புகளும்
மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகில் கடந்த ஓரு மாதத்திற்க்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், உடலில் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை ஏதும் இல்லாமல், சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்தும், நீரை வாரியிரைத்தும், கால்வாய் ஓரத்தில் படுத்து தூங்குவதும் அவ்வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது.

மேலும், பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்கள் மதியம் உணவு (சத்துணவு) சாப்பிட்டு, மீதமுள்ள உணவை சாலையோரம் குப்பை தொட்டியில் கொட்டுவதை பார்த்த மனநலம் பாதித்தவர், நாள்தோறும் அங்கு நாயுடன் கூட சேர்ந்து சாப்பிடுவது, அவ்வழியாக செல்வோரை மனம் வருந்த செய்கிறது. 

இப்பள்ளியின் எதிரேதான் திருத்தணி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், கடந்த ஓரு மாதமாக, ஒருவர் கண்ணில் கூடவா இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் தென்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

நாள்தோறும் மருத்துவமனைக்கு பணிக்கு வரும் பணியாளர் அல்லது மருத்துவர்களுக்குக் கூட அவரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்பதை  நினைக்கும்போது மனிதநேயம் எங்கே உள்ளது என தோன்றுகிறது.

எனவே, மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சம்மந்தப்பட்ட மாவட்ட மருத்துவதுறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என நகர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொது நல மருத்துவர் ஓருவர் கூறும்போது, சென்னையில் மட்டும் இயங்கி வந்த அவசர சேவை மற்றும் மீட்பு காப்பகங்கள் 2019 முதல் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில்
விரிவுபடுத்தப்பட்டு மனநல காப்பகங்கள் செயல்பபட்டு வருகின்றன. மனநல மருத்துவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தாமாகவே முன்வந்து அவரது மனநிலையைப் பரிசோதிக்கலாம். அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, ஒரு சிறு உத்தரவின் மூலம் அவரை மனநலக் காப்பகங்களில் சேர்க்கலாம்.

அதேபோல், மனநிலை பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரிபவர்களைக் காவல்துறையினர் பிடித்து நீதிபதியின் உத்தரவு மூலம் அவர்களை மனநல மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது
தெரிய வந்தால், நீதிபதி உத்தரவை அடுத்து, அவர்களை மனநலக் காப்பகங்களில் சேர்க்க முடியும். இதை, அவர்களின் விருப்பமின்றிச் செய்ய முடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com