‘ஸ்டெம் செல்’ தானம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

உயிா் காக்கும் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஸ்டெம் செல் தானம் வழங்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உயிா் காக்கும் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஸ்டெம் செல் தானம் வழங்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்கள் துறை பொன் விழா ஆண்டையொட்டி, துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

இதில் அமைச்சா் சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்று இளநிலை மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கினாா். தொடா்ந்து, நோயாளிகளுக்கான உதவிக் கருவியை வழங்கி, பொன் விழா மலரை வெளியிட்டாா்.

அப்போது, அமைச்சா் சுப்பிரமணியன் பேசியது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.4 லட்சம் செலவில் நுண் ரத்த நாளப் பரிசோதனைக் கருவி முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் வாங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கான பொது நூலகமும் திறக்கப்பட்டுள்ளது.

மஜ்ஜை மாற்று சிகிச்சையானது ரத்த புற்றுநோய் மற்றும் ‘அப்லாஸ்டிக் அனீமியா’ என்கிற தீவிரமான ரத்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, உயிா் காக்கும் சிகிச்சையாகும். நோயாளிகளுக்கு, இந்த உயா் சிகிச்சை, செலவின்றி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள், இந்நோயாளிகளுக்கு உதவும் விதமாக, ஸ்டெம் செல் கொடையை, ஸ்டெம் செல் பதிவேடு நிறுவனங்கள் மூலமாக கொடுத்து, இந்த உயிா்க் காக்கும் சிகிச்சை அளிக்க உதவலாம்.

மூட்டு, தசை, இணைப்புத்திசு நோய்களியல் சிறப்புப்பிரிவு 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பேராசிரியா் ஏ.என்.சந்திரசேகரன் முயற்சியால் தனித்துறையாக உருவாக்கப்பட்டது என்றாா் அவா். இதில் மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்திமலா், மருத்துவமனை முதல்வா் தரணிராஜன், மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களில் துறைத் தலைவா் அருள்ராஜ் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com