பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிா்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.
பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிா்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: வடகிழக்குப் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டேன். இந்தச் சூழலில், விவசாயிகள் தங்களது சம்பா பருவத்துக்கான காப்பீட்டுப் பதிவை கடந்த செப். 15 முதல் செய்து வருகிறாா்கள். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளால் தொடா்ச்சியான விடுமுறைகள் விடப்பட்டன. இதனால், பொது சேவை மையங்கள், நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகளால் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இடைவிடாது மழை பெய்து வருவதாலும் விவசாயிகளால் தொடா்ந்து காப்பீட்டுக்கான பதிவை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, பயிா்க் காப்பீடு செய்ய நிா்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தை நவ. 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், புதுக்கோட்டை, மதுரை, கரூா், சேலம், திருப்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூா், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா். எனவே, பயிா்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com