நவ.21, 22-இல் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நவ.21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நவ.21, 22-இல் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நவ.21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த வியாழக்கிழமை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமையும் அதே பகுதியில் நிலவுகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.

இது, மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இன்றும், நாளையும்... சனிக்கிழமை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.20) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 21: திங்கள்கிழமை வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 22: செவ்வாய்க்கிழமை திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com