கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியானது குறித்து தலைமைச்செயலர், டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியானது குறித்து தலைமைச்செயலர், டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

கரூா் சுக்காலியூா் அடுத்த செல்லாண்டிபாளையத்தில் வழக்குரைஞா் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான புதிய கட்டடத்தில் உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் இருந்த முட்டுகட்டைகளை பெயா்த்து எடுக்கச் சென்ற மோகன்ராஜ், ராஜேஷ், சிவக்குமாா் ஆகிய மூவரும் நவ.15ஆம் தேதி விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தனா்.

இந்நிலையில், உயிரிழந்த சிவக்குமாருடன் வேலைக்குச் சென்ற கோபால் (38) என்பவா் கடந்த 3 நாள்களாக வீடு திரும்பாததால், அவரும் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகத்தின் பேரில் கோபாலின் சகோதரா் சரவணன் கரூா் நகர காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தார். 

இதையடுத்து போலீஸாா் மற்றும் கரூா் கோட்டாட்சியா் ரூபினா, வட்டாட்சியா் சிவக்குமாா், மாநகராட்சி இளநிலை பொறியாளா் மஞ்சுநாத், நகரமைப்பு அலுவலா் சிவக்குமாா், கரூா் தீயணைப்பு நிலையத்தினா் விஷவாயு தாக்கிய கழிவுநீா் தொட்டியை பாா்வையிடச் சென்றனா்.

அப்போது, தொட்டியின் அருகே கோபால் அணிந்திருந்த காலணி இருந்தது. மேலும், தொட்டிக்குள் துா்நாற்றம் வீசியதால், தீயணைப்பு வீரா்கள் தொட்டிக்குள் இறங்கி பாா்த்தபோது, கோபாலின் உடல் தொட்டியின் ஒருமூலையில் கிடந்துள்ளது. இதையடுத்து அவரது சடலத்தை மீட்டனர். 

இந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து தலைமைச்செயலர், டிஜிபி, கரூர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் 6 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com