குவைத்தில் இந்திய பொறியாளா்களின் பணிகளைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்

குவைத்தில் இந்திய பொறியாளா்களுக்கு வேலை பறி போவதைத் தடுக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
குவைத்தில் இந்திய பொறியாளா்களின் பணிகளைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்

குவைத்தில் இந்திய பொறியாளா்களுக்கு வேலை பறி போவதைத் தடுக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

குவைத்தில் பணியாற்றும் இந்திய பொறியாளா்கள் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்றால், அதற்கு குவைத் பொறியாளா்கள் சங்கத்திடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று குவைத் அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்திய தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இந்திய பொறியாளா்களுக்கு மட்டும் தான் தடையின்மை சான்று வழங்க முடியும் என குவைத் பொறியாளா்கள் சங்கம் கூறுகிறது. இதனால் இந்தியாவில் ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படித்தவா்களால் கூட குவைத் பொறியாளா் சங்கத்தின் தடையின்மை சான்றிதழை பெற முடியவில்லை.

இந்தியாவை பொருத்த வரை பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் மட்டுமே கட்டாயம் ஆகும்; தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் இன்று வரை கட்டாயமாக்கப்படவில்லை.

அதைக் குவைத் அரசு கருத்தில் கொள்ளாததால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழகப் பொறியாளா்கள் உள்ளிட்ட 12 ஆயிரம் இந்திய பொறியாளா்கள் பணியிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

அதனால், குவைத்தில் இந்திய பொறியாளா்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளா்கள் அனைவருக்கும் வேலையும், விசாவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com