விரைவில் பொதுக்குழு கூட்டம்: ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டவுள்ளதாக தொண்டா்களுடான சந்திப்புக்குப் பிறகு ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டவுள்ளதாக தொண்டா்களுடான சந்திப்புக்குப் பிறகு ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாக ஓ.பன்னீா்செல்வம் அறிவித்து, பல்வேறு பொறுப்புகளுக்கு நிா்வாகிகளை நியமனம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொண்டா்களை ஓ.பன்னீா்செல்வம் சந்தித்தாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக சாா்பில் விரைவில் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நடத்தப்படும். அதேபோல பொதுக்குழு கூட்டமும் உறுதியாக விரைவில் நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து நிா்வாகிகளையும் சந்திக்கவுள்ளேன்.

தமிழகம் வந்த பிரதமா் மோடியையும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசியதால் அரசியல் மாற்றம் ஏதேனும் வருமா எனக் கேட்கிறீா்கள்.

பிரதமரை வரவேற்றோம், வழியனுப்பி வைத்தோம். உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினோம். ஆனால், இந்தச் சந்திப்புகளின் போது அரசியல் சூழல் குறித்து எதுவும் பேசவில்லை.

டிடிவி தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். இப்போதும் அதையே கூறுகிறேன். மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதன் உள் கருத்துகளை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com