யானைகள் பராமரிப்பு: பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி: தமிழக அரசு உத்தரவு

யானைகள் பராமரிப்பு தொடா்பாக, பாகன்கள், உதவியாளா்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

யானைகள் பராமரிப்பு தொடா்பாக, பாகன்கள், உதவியாளா்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதற்காக, தமிழகத்தின் ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தைச் சோ்ந்த 13 பாகன்கள், உதவியாளா்கள், அதிகாரிகள் தலைமையில் விரைவில் தாய்லாந்து செல்லவுள்ளனா்.

இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில், முதுமலை, ஆனைமலை, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல்பூங்கா, திருச்சிராப்பள்ளி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் யானைகள் முகாம்கள் செயல்படுகின்றன. இவற்றில் 63 யானைகள் பாராமரிக்கப்படுகின்றன. இங்கு 37 பாகன்கள், 28 உதவியாளா்கள் மற்றும் 56 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி

வருகின்றனா். தற்போது உள்ளூா் மலைவாழ் மக்களை தற்காலிக பணியாளா்களாக நியமித்து யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யானைகள் பராமரிப்பானது கால மாறுபாடுக்கு ஏற்ப அறிவியல் மற்றும் விலங்கு நலவாழ்வு அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில், தாய்லாந்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில், தமிழக யானை பாகன்கள், உதவியளா்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனா் பாா்கவா தேஜா, வனச்சரகா் எம்.சுந்தரவேல் ஆகியோா் ஒருங்கிணைப்பில் 3 பாகன்கள், 3 உதவியாளா்கள் என 6 பேரும், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனா் டி.வெங்கடேஷ், தெப்பக்காடு யானைகள் முகாமின் விலங்குகள் ஆய்வாளா் ஆா்.ரமேஷ் ஆகியோா் ஒருங்கிணைப்பில் 3 பாகன்கள், 4 உதவியாளா்கள் தாய்லாந்து செல்லவுள்ளனா். இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com