நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத யானைத் திருக்கை மீன்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் ராட்சச யானைத் திருக்கை மீன் 10 ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் மீனவர் வலையில் சிக்கியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். 
1.5 டன் எடையுள்ள ராட்சத யானை பெண் திருக்கை மீன்
1.5 டன் எடையுள்ள ராட்சத யானை பெண் திருக்கை மீன்

ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் ராட்சச யானைத் திருக்கை மீன் 10 ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் மீனவர் வலையில் சிக்கியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆழ்கடலில் மட்டுமே ராட்சத யானைத் திருக்கை மீன் காணப்படும்.

இந்நிலையில், பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் கரையோர பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது புதன்கிழமை சுமார் ஒன்னரை டன் எடையுள்ள ராட்சத யானைத் திருக்கை மீன் சிக்கிது. வலையை எடுக்க முடியாத நிலையில் கரைக்கு இழுத்து வந்தனர். மீனவர் வலையில் சிக்கியுள்ளது 1.5 டன் எடையுள்ள ராட்சத யானை பெண் திருக்கை மீன் என தெரிவந்தது. 

நாட்டு படகில் கொண்டு வரப்படும் ராட்சத யானை பெண் திருக்கை மீன்

இதனைத் தொடர்ந்து, 1.5 டன் எடை இருந்ததால் மொத்தமாக மீனை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. கருவாடுக்காக கூறு போட்டு பயன்படுத்தினர். இந்த திருக்கை மீனை ரூ.50 ஆயிரம் வரை கருவாடாக விற்பனை செய்யலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள் ராட்சத யானை பெண் திருக்கை மீனை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

ராட்சத யானை பெண் திருக்கை மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீனவர் வலையில் சிக்கியதாக குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com