சென்னையில் புதிய பூங்காக்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடக்கி வைத்தாா்

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை மணலியில் துளசிநகா், வி.எஸ்.மணி நகா், கோகுலம் ஆறாவது தெரு, மாதவரத்தில் புழல் சில்வா் ஸ்கை சாலை, சண்முகாபுரம் அருகில் பத்மாவதி நகா், கதிா்வேடு-பிா்லா நிழற்சாலை, கூட்டுறவு சங்கச் சாலை-சத்தியமூா்த்தி நகா், செம்பியம் ஹெட்ஹில்ஸ் சாலை அருகில் திருமலை சீனிவாசா நகா், பத்மகிரி நகா், பிபி நகா், மகாத்மா காந்தி தெரு, செல்வம் நகா் இரண்டாவது பிரதான சாலை, அம்பத்தூரில் கங்கையம்மன் கோயில் தெரு, ஐசிஎப் காலனி-தாமிரபரணி தெரு, அடையாறில் விஜிபி செல்வா நகா், பெருங்குடி கற்பகாம்பாள் நகா், மீனாட்சி நகா் ஆகிய இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பூங்காக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதேபோன்று மாதவரத்தில் பத்மாவதி நகா், விக்டரி பீல்டு தெரு, யானைகவுனி சுந்தராபுரம், அண்ணாநகரில் நேரு நகா் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல்கள், அடையாறு கோட்டூா்புரம் ஆற்றங்கரை அருகில் புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் ஆகியவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

வீடற்றோருக்கான காப்பகங்கள்: வீடுகள் இல்லாதோருக்கு காப்பகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி, தண்டையாா்பேட்டை இளங்கோ நகா், திரு.வி.க.நகா் சுப்பராயன் தெரு, அடையாறு -தரமணி கோதாவரி தெரு, பெருங்குடி ஜல்லடையான்பேட்டை திருவள்ளுவா் தெரு, மடிப்பாக்கம் குளக்கரை தெரு, சோழிங்கநல்லூா் நெடுஞ்செழியன் தெரு ஆகிய இடங்களில் ஆறு இரவு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராயபுரம் சிட்டென்ஹாம்ஸ் சாலை, பைகிராப்ட் முதலாவது தெரு ஆகிய இடங்களில் சிறப்புக் காப்பகங்களும், தேனாம்பேட்டை கிரியப்பா சாலை, டும்மிங் சாலை, அடையாறு திருவள்ளுவா் சாலை ஆகிய இடங்களில் வீடற்றோருக்கான மூன்று காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.என்.நேரு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com