மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

“அக்கா, தம்பியாகத் தொடர்வோம்”: பாஜக திருச்சி சூர்யா சிவா, டெய்சி சரண் கூட்டாகப் பேட்டி

எங்களுக்கிடையேயான பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொண்டோம் என பாஜக நிர்வாகிகள் திருச்சி சூர்யா சிவாவும், டெய்சி சரணும் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :24 நவம்பர் 2022, 2:59 pm

DIN

எங்களுக்கிடையேயான பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துக் கொண்டோம் என பாஜக நிர்வாகிகள் திருச்சி சூர்யா சிவாவும், டெய்சி சரணும் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவும் அலைபேசியில் மோதிக் கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் பேசிய சூர்யா சிவா, டெய்சி சரணை ஒருமையிலும் தகாத வார்த்தைகளிலும் பேசியது அக்கட்சியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய டெய்சி சரண், “விரும்பத்தகாத சில செயல்கள் நடந்துள்ளது பாஜகவிற்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா சிவா எனது தம்பி போலவே பழகினார். இந்த விவகாரத்தில் இருவரும் பரஸ்பரம் பேசி இத்துடன் இதனை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளோம். எனவே ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இது யாருடைய வற்புறுத்தலும் இல்லை. அக்கா, தம்பியாகவே நாங்கள் தொடர்ந்து பயணிக்க முடிவெடுத்துள்ளோம்” என்றார். 

அதனைத் தொடர்ந்து பேசிய சூர்யா சிவா, “இருவருக்கும் இடையே தனிப்பட்ட உரையாடலே நடந்தது. ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை சந்தித்தோம். எங்கள் இருவரின் தரப்பிலிருந்தும் ஆடியோ வெளியாகவில்லை. வேறு யார் மூலமாக வெளியானது என்பது விசாரணையில் தெரியவரும். நான் பேசியது தவறு என்றால் கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். இந்த பிரச்னைகளுக்கு முன்பாகவே குடும்ப உறவாகவே இருந்தோம்” எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.