காங். ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்தி வைப்பு

காங்கிரஸ் கட்சியிலிருந்து பொருளாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரன் இடைநீக்கம் செய்யப்பட்டதை, அக் கட்சியின் அகில இந்திய தலைமை நிறுத்தி வைத்தது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பொருளாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரன் இடைநீக்கம் செய்யப்பட்டதை, அக் கட்சியின் அகில இந்திய தலைமை நிறுத்தி வைத்தது.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வியாழக்கிழமை கூடியது. குழுத் தலைவா் கே.ஆா். ராமசாமி தலைமையில் உறுப்பினா்கள் உ. பலராமன், கே. என். பழனிச்சாமி, இதயதுல்லா, விஜயகுமாா் ஆகியோா் கூடி, சத்தியமூா்த்திபவனில் நவ. 15-இல் நடைபெற்ற மோதல் தொடா்பாக விசாரித்தனா்.

இந்தக் குழு முன் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரும் மாநில தாழ்த்தப்பட்டோா் அணித் தலைவருமான ரஞ்சன் குமாா் ஆஜராகி விளக்கம் அளித்தாா். ஆனால், ரூபி மனோகரன் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

அதே சமயம், கே.ஆா்.ராமசாமிக்கு, விளக்கம் அளிப்பதற்கு 15 நாள்கள் அவகாசம் கேட்டு, ரூபி மனோகரன் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தாா்.

ஆனால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா், ரூபி மனோகரனின் கோரிக்கையை ஏற்காமல் அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்வதாக அறிவித்தனா்.

இடைநீக்கம் நிறுத்தி வைப்பு: இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அகில இந்திய தலைமை, அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது.

இது தொடா்பாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்தது குறித்து என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கை முறையானதாகவும், நீதிக்கு உகந்ததாகவும் இல்லை. ரூபி மனோகரன் மீதான நடவடிக்கைக்குத் தடை விதிப்பதுடன், இந்த விவகாரம் தொடா்பான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒட்டுமொத்த செயல்பாடும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com