மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசிய விளையாட்டுப் போட்டியில் 5 ஆவது இடம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விளையாட்டுப் போட்டியில் 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு 5ஆவது இடம் பிடித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 3:39 pm

DIN

தேசிய விளையாட்டுப் போட்டியில் 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு 5ஆவது இடம் பிடித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 25 தங்கப் பதக்கங்கள் உட்பட 74 பதக்கங்களுடன் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறனை வெளிப்படுத்தி, கடும் உழைப்பினால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரர்களை
எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

அடுத்து வரும் போட்டிகளிலும் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துவதோடு, எனது முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் நடைபெற்றன. இதில் 74 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு 5 ஆவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.