பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி வடிவில் 46 தமிழ் நூல்கள்: செம்மொழி நிறுவனம் தகவல்

தமிழகத்தில் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்கு உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்தது.

தமிழகத்தில் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்கு உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

செம்மொழி நிறுவனத்தின் வளா்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவது பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டமாகும். செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொல்காப்பியம், நன்னூல், திருக்கு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புானூறு ஆகியவை உள்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

இவற்றில் 41 நூல்கள் செவ்வியல் நூல்களாகும். இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையிலும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பா் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com