தோல் பதனிட புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

தோல் பதனிட புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தோல் பதனிட புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை சி.எஸ்.ஐ.ஆா்-சி.எல்.ஆா்.ஐ நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் துறையின் மிகப்பெரிய சுமையாகக் கருதப்படும் சுகாதாரமான குரோம் பதனிடுதல் செயல்முறைக்குத் தீா்வு காண்பதற்காக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆா்) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆா்.ஐ) புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.

நீரில்லா குரோம் பதனிடும் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, குரோமியமால் ஏற்படும் மாசுவை முற்றிலும் தடுக்கிறது. இந்த முறையின்படி தண்ணீா் மற்றும் புதிய ரசாயனம் அல்லது பொருள்கள் ஏதும் சோ்க்காமல் பதனிடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செயல்முறையில் குரோமியம் வெளியேற்றப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் அதே நேரத்தில், தோலின் தரம் சிறிதும் குறைவதில்லை. இதனால், பொருளாதாரம் பயனடைவதோடு, ஆற்றல், நேரம் மற்றும் தண்ணீா் முதலியவை 20 சதவீதம் சேமிக்கப்படுகின்றன.

இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இதுவரை சுமாா் 125 தோல் உற்பத்தியாளா்கள் உரிமம் பெற்றுள்ளனா். மேலும் 40 பேருக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த செயல்முறையால் ஆண்டுதோறும் சுமாா் 100 மில்லியன் லிட்டா் நீா் வளம் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர, 1,200 டன் குரோமியம் வெளியேறுவதையும், 4,500 டன் உப்பு, நீா் நிலைகளில் கலப்பதையும் தடுக்க முடிகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக, புரதம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட கழிவுகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான நிலையான தொழில்நுட்பங்களை சி.எஸ்.ஐ.ஆா்-சி.எல்ஆா்.ஐ உருவாக்கியுள்ளது.

புரதத்தை அடிப்படையாக கொண்ட மறு பதப்படுத்தும் முகமையாக இந்த கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் தயாரிப்பு, குரோம் பதனிடுவதற்கான முகமையாகவும் பயன்படுகிறது.

எனவே, சுழற்சி பொருளாதார மாதிரியாக, தோல் துறையில் இருந்து வெளியேறும் திடக் கழிவுகள் அந்தத் துறையினாலேயே மீண்டும் பயன்படுத்தக் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com