36 செயற்கைக்கோள்களை அக்.23-இல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் வரும் 23-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் வரும் 23-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்திலிருந்து இரவு 12.07 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையான எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க் 3) மூலம் அந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வடிவமைக்கும் பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் செயற்கைக்கோள்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஜிஎஸ்எல்வி மாா்க்-3 ராக்கெட் 43.5 மீட்டா் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.

உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனம் அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவுள்ளது. இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனம், ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com