
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை என்று முன்னாள் நிதியமிச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் நிா்மலா சீதாராமன், வாஷிங்டன் நகரில் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்)-உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டாா். பல நாடுகளின் நிதியமைச்சா்களையும் அவா் சந்தித்துப் பேசினாா். அதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: இந்திய ரூபாய் மதிப்பு சரிவடையவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வேகமாக வலுவடைந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைப் போலத் தெரிகிறது.
இதையும் படிக்க- தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டீர்களா? அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யுமாம்!
உலகின் அனைத்து நாடுகளின் செலாவணிகளும் அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவடையும் தோற்றத்தைப் பெற்றுள்ளன. மற்ற நாடுகளின் செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை என்று முன்னாள் நிதியமிச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்திய ரூபாய் வீழ்ச்சியடையவில்லை. டாலர் மதிப்புதான் வலுவடைந்துள்ளது என நிதியமைச்சர் கூறியது உண்மைதான். தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரோ-கட்சியோ நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றுதான் எப்போதுமே கூறுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.