
கோப்புப்படம்
கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
காவலரின் பணியிட மாறுதலை கர்மா அடிப்படையில் ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை காவலர் ஸ்ரீமுருகன் தூத்துக்குடி மாற்றப்பட்டதை கர்மா அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயன பிரசாத் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. இத்தடையை நீக்கக்கோரி மதுரை காவலர் முருகன் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயன பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற காவலரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறப்பு
கர்மா அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டப்படியே செய்லபடுகிறது. கர்மாவுக்கு என ஏதேனும் விதிகள் உள்ளனவா என்றும் நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயன பிரசாத் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G