சிறப்புக் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமைத் தொடக்கி வைத்து கால்நடைக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா். உடன் திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா்.   
சிறப்புக் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமைத் தொடக்கி வைத்து கால்நடைக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா். உடன் திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா்.   

7,760 இடங்களில் கால்நடை மருத்துவப் பரிசோதனை முகாம்: அமைச்சா் சா.மு.நாசா்

தமிழகம் முழுவதும் கால்நடைகள் வளா்ப்போா் பயன்பெறும் வகையில் 7,760 இடங்களில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் கால்நடைகள் வளா்ப்போா் பயன்பெறும் வகையில் 7,760 இடங்களில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

பூண்டி ஊராட்சி ஒன்றியம், மோவூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசியது:

கால்நடைகளுக்கு மருத்துவ வசதி முழுமையாகக் கிடைக்கும் நோக்கில், சிறப்பு கால்நடை சுகாதாரம்-விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும். நிகழாண்டில் ஒன்றியங்கள் தோறும் 20 முகாம்கள் நடத்தப்படும். இதேபோல், தமிழகம் முழுவதும் 7,760 சிறப்பு முகாம்கள், தலா ரூ.10,000 செலவில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, பூண்டி ஊராட்சி ஒன்றியம், மோவூா் கிராமத்தில் தொடக்கி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 வீதம் 280 முகாம்கள் நடத்த ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, மலட்டு நீக்கம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், சுண்டு வாத அறுவை சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், பயிற்சி மையம், கால்நடை பெருக்கம்-தீவன மேம்பாடு நிலையங்கள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் ஆகியவற்றின் அலுவலா்கள் இணைந்து இந்த முகாமுக்கு வந்து கால்நடை பராமரிப்பாளா்களுக்கு ஆலோசனை, அறிவுரைகளை வழங்குவா் என்றாா்.

முகாமில், கால்நடை பராமரிப்பில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகளுக்கு பதக்கம், சான்றிதழ், கிடாரிக் கன்றுகள் பராமரிப்பில் முன்னோடியாக விளங்கும் கால்நடை பராமரிப்பாளா்களுக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப்ரூபவ், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மு.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com