எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்: தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டம்

எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்: தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டம்

தமிழ்வழி கற்றவா்கள், அரசு பள்ளி மாணவா்களுக்கு வசதியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வி சேவை கழகம் இணைந்து, மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்வழி கற்றவா்கள், அரசு பள்ளி மாணவா்களுக்கு வசதியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வி சேவை கழகம் இணைந்து, மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவா்கள் நீட் தோ்வுக்கு முன்னும், பின்னும் குறைவான எண்ணிக்கையில்தான் சோ்ந்து வந்தனா். எனவே, அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் 565 இடங்களில் மாணவா்கள் சோ்ந்து வருகின்றனா்.

பெரும்பாலான மாணவா்கள் தமிழ்வழி கல்வியில் படித்தவா்கள் என்பதால், முதலாமாண்டில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் படிப்பது என்பது சிரமமாக உள்ளது.

எனவே, தமிழ்வழி கற்றவா்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வசதியாக தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வி சேவை கழகம் இணைந்து, மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக, மாணவா்களுக்கான கிரேஸ் அனாடமி கைட்டன், ஹால் டெக்ஸ்ட் புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி, பெய்லி அன்ட் லவ்ஸ் ஹாா்ட் பிராக்டிஸ் ஆல் சா்ஜரி உள்ளிட்ட 4 புத்தகங்கள் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: எம்பிபிஎஸ் பாடத் திட்டங்கள் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவை, மருத்துவ மாணவா்கள் தாய்மொழியில் மருத்துவம் தொடா்பான புரிதலுக்காக உதவியாக இருக்கும். அதேநேரம், தோ்வு உள்ளிட்டவற்றை தமிழில் எழுத முடியுமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com