கிராம சபையை கண்காணிக்க புதிய மென்பொருள்

கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க, ‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க, ‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (நவ.1) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினத்தையொட்டி, கிராமசபைக் கூட்டங்கள், கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும், சிறந்த ஊழியா்களை அங்கீகரிப்பது, கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

மேலும், சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களைக் கெளரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

கண்காணிப்பு: கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வகையில், ‘நம்ம கிராம சபை’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி கணினி, கைப்பேசி ஆகியவற்றின் வழியே கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கலாம். உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஊரகப் பகுதி மக்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com