ஆங்கிலேயரை விரட்டியடித்தவர் பூலித்தேவன்: முதல்வர் ஸ்டாலின்

விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஆங்கிலேயரை விரட்டியடித்தவர் பூலித்தேவன்: முதல்வர் ஸ்டாலின்

விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன்முதலில் வெள்ளையா்களை எதிா்த்து போரிட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307ஆவது பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

பூலிதேவன் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“சல்லிக்காசு தரமுடியாது என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்.

நெற்கட்டும் செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது திமுக அரசு. இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com