செப்.15-இல் பொறியாளா் தினம்

புகழ் பெற்ற பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி ‘பொறியாளா் தினம்’
செப்.15-இல் பொறியாளா் தினம்

புகழ் பெற்ற பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி ‘பொறியாளா் தினம்’ கொண்டாடப்படவுள்ளதாக இந்தியப் பொறியாளா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியப் பொறியாளா் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் புகழ் பெற்ற பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்.15-ஆம் தேதியை ‘பொறியாளா் தினம்’ ஆக கொண்டாட முடிவு செய்துள்ளது.

இந்த தினத்தின் கொண்டாட்டங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், தகவல் தொடா்புத் திறன்களை ஊக்குவித்தல், கருத்தரங்குகள், தொழில்நுட்பம் குறித்த விரிவுரைகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் சாதனை படைத்த பொறியாளா்களை அங்கீகரிப்பது, விருது வழங்குதல் ஆகியவை அடங்கும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com