நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே; சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே; சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ. பெரியசாமி
நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே; சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ. பெரியசாமி


சென்னை: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனையும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் எரிவாயு உருளைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். 5 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

மக்களின் வசதிக்காக, நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களை வாங்க, நியாயவிலைக் கடைகளுக்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இல்லாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com