வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகள் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ராணுவம் 26 சதவிகிதம், அதைத் தொடர்ந்து கடற்படை 19 சதவிகிதம், விமானப்படை மற்றும் கடற்படையில் தலா இரண்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது என பென்டகன் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 நிதியாண்டில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து, சாதனை படைத்துள்ளதாக பென்டகன் வியாழனன்று வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பதிலளிப்பு அலுவலகம் (எஸ்ஏபிஆர்) 2021 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, பணியாளர்கள் 8,866 பேர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு 7,813 ஆக இருந்தது.
ஆனால், ஒரு பகுதியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது, மேலும் எஸ்ஏபிஆர், ராணுவ ஆய்வுகளைப் பயன்படுத்தி, பணிபுரியும் பணியாளர்களில் சுமார் 36,000 பெண்கள் மற்றும் ஆண்களில் 8.4 சதவிகித பெண்கள் மற்றும் 1.5 சதவிகித ஆண்கள் தேவையற்ற பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், பாலியல் வன்கொடுமைகளின் பாதிப்பு குறித்த ஆய்வு விவரங்களில், “உண்மையான அதிகரிப்பு இருந்ததா என்பதை அறிவியல் பூர்வமாக தீர்மானிக்க முடியாது” என்று பென்டகன் கூறியுள்ளது.
ஆனால், மற்ற புள்ளிவிவரங்கள் அதிகரிப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன, 2018-க்குப் பிறகு "ஆரோக்கியமற்ற ராணுவச் சூழலில் ஒட்டுமொத்த அதிகரிப்பையே குறிக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.
2006 ஆம் ஆண்டில் இந்த பிரச்னையை முதன்முதலில் உன்னிப்பாக ஆய்வு செய்ததில் இருந்து, "இது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் மிக அதிகமான பாதிப்பு விகிதம் இதுவாகும் என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன" என்று பென்டகனின் படை அலுவலக நிர்வாக இயக்குநர் எலிசபெத் ஃபோஸ்டர் கூறினார்.
ஆண்களைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 2006 இல் இருந்து அதிகயளவில் இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், இவை மன உளைச்சல் மற்றும் மிகவும் மனச்சோர்வைத் தருகின்றன” என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று ஃபாஸ்டர் கூறினார்.
அதாவது, ராணுவத்தில் 26 சதவிகிதமும், கடற்படையில் 19 சதவிகிதமும், விமானப்படை மற்றும் கடற்படையில் தலா இரண்டு சதவிகிதம் என அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், அதிபர் ஜோ பைடன் ராணுவச் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாக அறிவித்து ஆணை பிறப்பித்தார்.
பாலியல் வன்கொடுமைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் சிறார்கள் மீதான தாக்குதல்கள் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும், நீதிமன்றத்திற்கு வழக்குகளை எடுத்துச் செல்வதா என்பது குறித்த முடிவுகள் ராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக சிறப்பு வழக்குரைஞர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பாலியல் துன்புறுத்தல் உரிமைகோரல்களை புறக்கணிப்பது, மூடிமறைப்பது அல்லது இலகுவாக நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் மூத்த அதிகாரிகள் மீது எழுந்தது. ராணுவம் மாற்றங்களை எதிர்த்தது, முந்தைய அமைப்பு ஒழுக்கத்தைப் பேணுவதற்கான அவசியத்தை சிறப்பாகச் செய்ததாக தெரிவித்தது.
ஆனால், பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்ததால், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், இராணுவத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை எப்படிச் சிறப்பாகச் சமாளிப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க ஒரு சுயாதீன ஆணையத்தை நியமித்தார்.
வழக்குகளைத் தொடரவோ அல்லது வழக்குத் தொடராத அதிகாரத்தை கட்டளைப் படிநிலையிலிருந்து நீக்குவதுதான் அதனை சமாளிப்பதற்கான ஒரே வழி என்று ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”அட்லி படம் போல...!” அந்த மொழிதான் அவர்களுக்குப் புரியும்! முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



