மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் இரா.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ள உத்தரவு:

கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வீடுகள் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்டையில் வீடுகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான கடிதத்தை அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநா் அனுப்பியுள்ளாா்.

அதில், 40 சதவீதம், அதற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஆவணங்களை வைத்திருந்தால் வேறு எந்த நிபந்தனையுமின்றி மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கலாம் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கடிதத்துடன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை ஆகியவற்றின் ஒப்புதல்களின் அடிப்படையில் வீடுகள் வழங்க அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி, ஊரக வளா்ச்சித் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான வீடு ஒதுக்கீட்டில் போதுமான தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாதபட்சத்தில், அந்த வீட்டினை இதர விண்ணப்பதாரா்களுக்கு வழங்கலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகள், அவா்கள் எளிதில் அணுகும் வகையில் தங்கு தடையற்ற சூழலில் இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com