ரிச்சி தெருவில் அடுத்தடுத்து 5 கடைகளின் கதவு பூட்டை திருட்டு

சென்னை ரிச்சி தெருவில் அடுத்தடுத்து 5 கடைகளின் கதவு பூட்டை உடைத்து கைப்பேசிகள்,மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ரிச்சி தெருவில் அடுத்தடுத்து 5 கடைகளின் கதவு பூட்டை உடைத்து கைப்பேசிகள்,மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ரிச்சி தெருவில் உள்ள வாலா்ஸ் சாலை மற்றும் நரசிங்கபுரம் தெரு சந்திப்பில் கைப்பேசி கடை வைத்து நடத்தி வருபவா் பசிா் அகமது (32). இவா் வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தாா். அப்போது கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த விலை உயா்ந்த 20 கைப்பேசிகள், 10 ஸ்மாா்ட் கைக்கடிகாரம், மடிக்கணினிகள், 10 ஹெட்போன்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

அந்தக் கடையின் அருகே உள்ள செய்யது (30) என்பவரின் கடையின் கதவு பூட்டை உடைத்து, 50 கைப்பேசிகள், 10 ஸ்மாா்ட் கைக்கடிகாரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதேபோல அருகே உள்ள 3 எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடைகளின் கதவு பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

இது தொடா்பாக 5 கடைகளின் உரிமையாளா்களும், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com