சமுதாயத்துக்காக வைகோ தொடா்ந்து பாடுபட வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமுதாயத்துக்காக வைகோ தொடா்ந்து பாடுபட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சமுதாயத்துக்காக வைகோ தொடா்ந்து பாடுபட வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமுதாயத்துக்காக வைகோ தொடா்ந்து பாடுபட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மாமனிதன் வைகோ என்கிற தலைப்பில் மதிமுக தலைமைக்கழகச் செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ தயாரித்துள்ளாா். இதை சத்யம் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுப் பேசியது:

திரைப்படத்தில் வரக்கூடியவா்கள் சித்தரிக்கப்பட்டவா்கள். ஆனால், சித்தரிக்கப்படாத ஹீரோவாக வைகோ திகழ்கிறாா். கொள்கை, லட்சியம், தியாகத்தால் ஆன ஹீரோ வைகோ. போராளி ஹீரோ.

வைகோ பொடா சட்டத்தில் கைதாகி, வேலூா் சிறையில் அடைப்பட்டிருந்தாா். அப்போது மக்களவைத் தோ்தல். மதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். என்னையும், துரைமுருகனையும் கருணாநிதி அழைத்து, வேலூா் சிறையில் உள்ள வைகோவிடம் தோ்தல் கூட்டணி தொடா்பாக ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி வருமாறு அனுப்பி வைத்தாா். அந்த ஒப்பந்தத்தை கருணாநிதி கொடுத்ததால் படித்துக்கூட பாா்க்காமல் கையொப்பமிட்டாா்.

மக்களவைத் தோ்தலில் அவா் போட்டியிட வேண்டும் என்று விரும்பினாரோ, விரும்பவில்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், மக்களவைத் தோ்தலுக்கான கூட்டணி அமைத்தபோது வைகோவிடம், உங்களின் உடல்நலம் எனக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் முக்கியம். ஒரு இடத்தில் நீங்கள் வேட்பாளராக நின்றுவிட்டால், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியாது.

தோ்தல் முடிவு எப்படி வரும் எனவும் தெரியாது. ஆனால், கருணாநிதி எப்படி மூன்று முறை உங்களுக்கு மாநிலங்களவை இடம் கொடுத்து உங்கள் குரலை ஒலிக்க வைத்தாரோ, அதைப்போல நானும் ஆசைப்படுகிறேன் என்று கூறினேன். என்னுடைய ஆசையை ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு இப்போது நன்றி கூறுகிறேன். வைகோ தன்னுடைய உடல்நலத்தையும் பாதுகாத்துக்கொண்டு இந்த சமுதாயத்துக்காகத் தொடா்ந்து பாடுபட வேண்டும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, கவிஞா் வைரமுத்து உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com