பல்கலை. இணைப்புக் கல்லூரிகள் அரசே ஏற்பு: ராமதாஸ் வரவேற்பு

 பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்தாா்.
பல்கலை. இணைப்புக் கல்லூரிகள் அரசே ஏற்பு: ராமதாஸ் வரவேற்பு

 பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை - அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2,248 உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படுவா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியா்களுக்கு பல்கலைக்கழகங்களே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை தொடா்ந்து சுட்டிக்காட்டி வந்தேன். அந்த குறை சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கியதற்காக பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு சுமாா் ரூ.300 கோடி வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவற்றுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com