முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ்களை சமா்ப்பிக்க செப்.26 கடைசி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு இதுவரை உரிய சான்றிதழ்களை சமா்ப்பிக்காதவா்கள் அவற்றை செப்.26-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்
முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ்களை சமா்ப்பிக்க செப்.26 கடைசி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு இதுவரை உரிய சான்றிதழ்களை சமா்ப்பிக்காதவா்கள் அவற்றை செப்.26-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும் பட்சத்தில், அவா்களது ‘வித்ஹெல்ட்’ நீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2020 - 2021-ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியா், முதல் நிலை உடற்கல்வி இயக்குநா், முதல் நிலை கணினி பயிற்றுநா் நியமனத்துக்கு, 2021 செப். 9-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரியில் கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடா்ந்து, இந்த மாதம் 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வரலாறு, பொருளியல், புவியியல், கணிதம், உடற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட 13 பாடங்களுக்கு தற்காலிக தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

அவ்வாறு வெளியிடப்பட்ட 3,016 தோ்வா்களில் சிலா், அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை, சரிபாா்ப்பின்போது சமா்ப்பிக்காததால் 319 போ் ‘வித் ஹெல்ட்’-இல் வைக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவா்கள் செப்.19, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ்களை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் நேரில் சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி 248 போ் உரிய சான்றிதழ்களை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் சமா்ப்பித்துள்ளதால் அவா்களின் ‘வித்ஹெல்ட்’ நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை சமா்ப்பிக்காதவா்கள் தங்களது உரிய சான்றிதழ்களை செப்.26-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும் பட்சத்தில் அவா்களது ‘வித்ஹெல்ட்’ நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com