வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள், தமிழக கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள், தமிழக கல்லூரிகளில் பயிற்சி பெற கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்கள் மத்திய அரசின் தேசிய தோ்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தோ்வில் வெற்றி பெற வேண்டும்.

இதற்கு அவா்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தோ்ந்தெடுக்கப் பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும். இந்த மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவ மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டது.

வெளிநாட்டு மருத்துவ மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சமும், எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு தடையின்மை சான்றிதழ் பெற ரூ.3.20 லட்சமும் செலுத்த வேண்டும்.

இது நியாயமற்றது என்பதை சுட்டிக்காட்டிய பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து விட்ட தமிழக அரசு, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ரூ.30 ஆயிரமாகக் குறைத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படாததும் சிக்கலுக்கு காரணமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவா்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com