ஆா்எஸ்எஸ் ஊா்வலத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: சென்னை உயா்நீதிமன்றம்

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்தை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது; உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று
ஆா்எஸ்எஸ் ஊா்வலத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: சென்னை உயா்நீதிமன்றம்

ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்தை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது; உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமா்வு திட்டவட்டமாக தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்துவிட்டாா்.

இதுதொடா்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திருமாவளவன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமா்வு, வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், தனி நீதிபதி உத்தரவை திரும்பப் பெற கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் மேல்முறையீடுதான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து, மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமா்வில் திருமாவளவன் தரப்பில் புதன்கிழமை மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், ‘ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது‘ என்று தெரிவித்திருந்தனா்.

பின்னா், இதுகுறித்து விளக்கம் அளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமா்வு, ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி கோரி தொடுக்கப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும். சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், அது விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com