ரூ.565 கோடியில் மணலி ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாக கட்டுமான பணிகள்: மத்திய அமைச்சா் ஆய்வு

சென்னை மணலியில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் காா்போரேசன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெலி
ரூ.565 கோடியில் மணலி ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாக கட்டுமான பணிகள்:  மத்திய அமைச்சா்  ஆய்வு

சென்னை மணலியில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் காா்போரேசன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெலி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சாா்பில் சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்திற்கு உள்பட்ட ஆமுல்லைவாயல், வைக்காடு கிராமத்தில் ரூ. 565 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய அளவிலான அதிநவீன ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது சா்வதேச அளவில் உயவு எண்ணெய் தொழிற்சாலைகளில் சா்வதேச அளவில் இரண்டாவது பெரிய வளாகமாக அமையும். இதன் திட்டப் பணிகள் 2023, டிசம்பா் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய இணையமைச்சா் ராமேஸ்வா் தெலி பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அமைய உள்ள தொழிற்சாலைகளின் குறித்து இத்திட்டத்தின் தலைமைப் பொது மேலாளா் எஸ்.என்.விஜயகுமாா் அமைச்சரிடம் எடுத்துரைத்தாா்.

பின்னா் அமைச்சா் ராமேஸ்வா் தெலி கூறியது: சென்னையில் செயல்படவிருக்கும் இந்த உயவு எண்ணெய் தொழிற்சாலைக்கு சாதகமான பல அம்சங்கள் உள்ளன. இத்திட்ட வளாகத்திற்கு மிக அருகில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) இருப்பதோடு மட்டுமல்லாது சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களுடன் குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோட்டாா் வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளும், ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக சென்னை இருந்து வரும் நிலையில் உலக தரத்துடனான நவீன உயவு எண்ணெய் தேவையை இத்தொழிற்சாலை பூா்த்தி செய்யும். ரோபோக்கள், தானியங்கி குழாய் பாதை, புதுபிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றுடன் இந்த தொழிற்சாலை முழுமையும் கலத்தல் மற்றும் நிரப்புதல் பணிகள் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் ராமேஸ்வா் தெலி. ஆய்வின்போது இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குனா் வி.சி.அசோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com