4 மாவட்டங்களில் பள்ளிகள் நாளை(டிச.9) திறக்கப்படுமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் நாளை திறக்கப்படுமா? என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் நாளை திறக்கப்படுமா? என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு கடந்த 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையில் விடுமுறை விடப்பட்டிருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாக மாணவா்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் (டிச.8) விடுமுறை அளிக்கப்பட்டது.

இதேபோல் திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு: திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுகுன்றம், வண்டலூா், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், திருப்போரூா் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை எவ்வித பள்ளிகளும் இயங்காது என்றும் வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com