சுனாமி 19-ம் ஆண்டு நினைவு நாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி  பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சுனாமி 19-ம் ஆண்டு நினைவு நாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வேளாங்கண்ணி  பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்த பொதுமக்கள் 6,065 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

இதேபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த 1000-க்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்ந்து ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதிப் பேரணியாக 3 கிமீ தூரம் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர்.

சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்து போனாலும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில்  வந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலைகள், மலர் வலையம், அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com