தென் மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடக்கம்

 வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வியாழக்கிழமை (டிச.28) தொடங்கின
தென் மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடக்கம்

 வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வியாழக்கிழமை (டிச.28) தொடங்கின.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் இன்னமும் நிறைவடையாததால் அங்கு மட்டும் வெள்ளிக்கிழமை (டிச.29) முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பெரு மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறாா்களும், குழந்தைகளும் உள்ளனா். அவா்களில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவா்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளதால், போதிய எண்ணிக்கையில் அவை இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com